Thursday, 24 July 2025

EPILOGUE

He that receives whomsoever I send receives Me; and he that receives Me receives Him that sent Me.”

~ Jesus Christ (Jn 13:20). 

The primary objective of Enlightenment is to permanently realize the pleasant primordial Peace of Lord residing within our Self. But since we have not yet realized our Self, we have to realize our Self first before realizing the absolute Peace within our Self. Again, our Self can be realized only after filtering its Consciousness just as the Sun can be seen only through a smoke-glass filtering its rays. However, our Consciousness is buried deep in our body, mind and heart, and so, we have to discriminate and internally separate It first from our body, mind and heart.

You discriminate and internally separate your Consciousness from your mind, body and heart first. Next, you filter your Consciousness and realize your Self to get Enlightenment. And finally, you experience the absolute primordial Peace of Lord residing in your Self. This is the process. You may choose any path you like, but you have to necessarily go through these three steps to get Enlightenment and achieve its primary objective.

How to discriminate and separate your Consciousness from your mind, body and heart? You may practice Divine Love Yoga.

I have explained Divine Love Yoga in adequate detail in my book “Secrets of Manifestation”.

You should not expect results overnight. Before Consciousness is internally separated from your mind, body and heart, It should be discriminated from them. The discrimination process takes about two years. The internal separation process is a very long one taking about six years. Filtering of Consciousness to realize the Self takes about one year. Finally, it takes about one year to realize the pleasant primordial Peace of Lord residing within your Self. Thus, the whole spiritual journey takes about a decade.

You have to be patient and continue the practice. It will take about three to four years before you see the first visible sign of your spiritual progress before your eyes. Because until your Consciousness is internally separated from your mind, you cannot perceive any concrete evidence of your spiritual journey. So, don’t give up midway. All the best.

Your comments, if any, may be recorded below or sent to my email id (umasreedasan@gmail.com).

 





பின்னுரை


“நான் அனுப்பியவரைப் பெறுபவன், என்னைப் பெறுகிறான்; என்னைப் பெறுபவன், என்னை அனுப்பியவரைப் பெறுகிறான்”

~ ஏசு நாதர் (யோவான் 13:20).

ஆன்மீக ஞானம் பெறுவதற்கான முயற்சியின் முக்கிய இலக்கு என்னவென்றால், நம் ஆத்மாவுக்குள் விளங்கும் இவ்வுலகை ஆளும் ஈசுவரனின் இனிமையுடன் கூடிய தொன்மையான அமைதியை நிரந்தரமாக அடைவதாகும். ஆனால், நாம் இன்னும் நம் ஆத்மாவை அனுபவத்தில் அறியவில்லை என்பதால், ஆத்மாவுக்குள் விளங்கும் புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாத அந்த அமைதியை அடைய முயற்சி செய்யும் முன்பாக, ஆத்மாவை அனுபவத்தில் அறிய முயற்சி செய்ய வேண்டும். நம் ஆத்மாவை அதன் உயிருணர்வை வடிகட்டிய பின்புதான் காண இயலும் – எப்படி சூரியனை புகைக் கண்ணாடி மூலம் அதன் கிரணங்களை வடிகட்டி விட்டுத்தான் பார்க்க இயலுமோ அப்படி. தவிரவும், உயிருணர்வு நம் உடல்-மனம்-நெஞ்சின் ஆழத்தில் புதையுண்டு கிடப்பதால், முதலில் நம் உயிருணர்வை நம் உடல்-மனம்-நெஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி அறிந்து, பின் உள்முகமாகப் பிரித்து அறிய வேண்டும்.

உங்கள் உயிருணர்வை முதலில் உங்கள் உடல்-மனம்-நெஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி அறிந்து, பின் உள்முகமாகப் பிரித்து அறிய வேண்டும். அடுத்ததாக, உங்கள் உயிருணர்வை வடிகட்டி உங்கள் ஆத்மாவைக் கண்டு ஆன்மீக ஞானம் அடைய வேண்டும். இறுதியாக, உங்கள் ஆத்மாவுக்குள் விளங்கும் ஈசுவரனின், புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாத தொன்மையான அமைதியை அடைய வேண்டும். இதுதான் செயல்முறை. உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த மூன்று படிநிலைகளைத் தாண்டித்தான் ஆன்மீக ஞானமடைந்து அதன் இலக்கை அடைய இயலும்.

உடல்-மனம்-நெஞ்சத்திலிருந்து உங்கள் உயிருணர்வை எப்படி வேறுபடுத்தி, உள்முகமாகப் பிரிப்பது? தெய்வீக அன்பு யோகம் செயல்முறையைக் கடைப்பிடிக்கலாம்.

அதிரடியாக பலன்களை எதிர்பார்க்க முடியாது. உயிருணர்வை உடல்-மனம்-நெஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி அறிவதற்கு ஏறத்தாழ இரண்டு வருடங்கள் தேவைப்படும். அதனை உள்முகமாகப் பிரிக்கும் செயல்முறையோ நீண்ட காலம் பிடிக்கும் ஒன்றாகும் – ஆறு வருடங்கள் வரை ஆகலாம். உயிருணர்வை வடிகட்டி ஆத்மாவைக் காண்பதற்கு ஒரு வருடம் ஆகும். இறுதியாக, ஆத்மாவுக்குள் விளங்கும் தொன்மையான அமைதியை அனுபவத்தில் பெறுவதற்கு மேலும் ஒரு வருடம் ஆகும். மொத்த ஆன்மீகப் பயணத்தை முடிப்பதற்கு பத்தாண்டுகள் தேவைப்படும்.

எனவே, பொறுமையுடன் செயல்முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. உங்கள் ஆன்மீக முன்னேற்றத்தின் முதல் சான்றை நீங்கள் வெளியே பார்ப்பதற்கு மூன்றிலிருந்து நான்கு வருடங்கள் வரை ஆகலாம். ஏனெனில், உயிருணர்வு மனத்திலிருந்து உள்முகமாகப் பிரிக்கப்படும் வரையில், உங்கள் ஆன்மீகப் பயணத்தின் வலுவான புறச்சான்று ஏதும் உங்கள் கண்களுக்குப் புலனாகாது. ஆகவே, நடுவழியில் பயணத்தைக் கைவிட்டு விடாதீர்கள். குருவருள் முன்னும் திருவருள் பின்னுமாக உங்களுக்குத் துணை நின்று, உங்கள் ஆன்மீகப் பயணம் இனிதே நிறைவுபெறப் பிரார்த்திக்கிறேன்.

உங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின், இந்த வலைப்பதிவுத் தளத்திலும் பதிவிடலாம்; என்னுடைய மின்னஞ்சலுக்கும் (umasreedasan@gmail.com) அனுப்பலாம்.

1 comment:

  1. Superb experience and narration. This kind of step by step process and experience can’t be found anywhere in such a simple and easily understandable way. May God and Guru bless the readers to attain Self Realisation thru this path of Surrender!

    ReplyDelete