“You need not go far in search of Me. Barring your name and form, there exists in you, as well as in all beings, a sense of Being or Consciousness of Existence – That is Myself. Knowing this, you see Me inside yourself as well as in all beings. If you practice this, you will realize all-pervasiveness, and thus attain oneness with Me.”
~ Shirdi Sai Baba.
I was on a professional assignment to a
remote village near the southern tip of India. As the assignment itself was an
easy routine one and the journey time was more than five hours, I spent my
journey time contemplating on Lord and reading a spiritual book alternately.
By now my exclusively traditional devotional
book collection began to accommodate some contemporary wisdom books as well. I
no longer expected the arrival of the Lord in form. My discrete model of Lord
had evolved into a continuum one. Yet the melancholy of my heart in not yet
seeing the Lord continued - after all, it was the major goal of my life.
I arrived at the process plant in that
village in the evening and in an hour my professional assignment was finished.
I was checked in to the guest house of the plant as I planned my return journey
the next morning. After dinner I requested the manager to send me tea at 5:30
in the morning, and after setting the alarm at 5:00 I went to sleep.
When I woke up at 5:00, I felt like doing
meditation and so immediately I sat up meditating on the bed itself. With my
eyes closed I was casually listening to the sound of window air conditioner in
the room. Hardly five minutes passed when the calling bell rang up. I went to
the door wondering why the manager had sent tea at 5.
When I was sipping my tea, I casually
glanced at my watch, and to my utter disbelief it showed 05:40.
On my return journey I felt something
strange in my head. There was something noticeably different with the vision of
my eyes and the cognitive process of that vision by my brain. I could stare at
space for any length of time as if I was staring at something pervading the
space. In fact, I spent the entire five-hour return journey simply staring at
nothing through the window of the car. My mind was extraordinarily calm; it
didn’t want to think anything or process anything it was seeing. My intellect
was wondering what’s going on in my eyes and brain.
This state persisted for a couple of
months. Then one day when I sat in meditation, I observed a strange phenomenon
inside my brain. I was listening to the occasional external noise. I was
thinking some sporadic thoughts. And here’s the key. This explained what was
happening inside my head for the past couple of months. I could observe that I was hearing the
occasional external noise, and I could observe
that I was thinking my sporadic thoughts.
My brain was logically and functionally divided
into three parts. First two functions were usual ones - one was receiving and
processing sensory inputs like external noise, and the other was generating and
processing thoughts. Nothing new with these two functions of the brain. But the
weird third function of observation
of these two functions was completely new to me.
Who am I? The guy who hears and thinks or
the guy who observes my hearing and thinking? I had to wait four long years to
find the answer to this question.
3. உயிருணர்வு
“என்னைத் தேடி தூரமாக எங்கும் செல்ல வேண்டியதில்லை. பெயர் வடிவம் தாண்டி உனக்குள்ளும் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் உயிர்த்தன்மையான உணர்வு ஒன்று இருக்கிறதே, அது நான்தான். இவ்வாறு அறிந்து, உனக்குள்ளும் பிறருள்ளும் இருக்கும் என்னைக் காண்பாயாக. இப்படிப் பயிற்சி செய்தால், எங்கும் விரவி நிற்கும் தன்மையை அடைந்து, என்னுடன் ஒருங்கிணைந்து விடுவாய்.”
~ சீரடி ஸாயி பாபா.
தமிழ்நாட்டின் தென் மாவட்டம் ஒன்றில் இருக்கும் கிராமம் ஒன்றுக்கு தொழில்முறை வேலையாகச் செல்ல வேண்டியிருந்தது. வேலை மிகவும் சுலபமான ஒன்று என்பதாலும், பயண நேரம் ஐந்து மணிக்கு மேல் ஆகும் என்பதாலும், பயணம் முழுவதும் வேறு சிந்தனை ஏதுமின்றி, இறைவனைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டும் ஆன்மீக புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டும் இருந்தேன்.
அந்த காலகட்டத்தில், வழக்கமாக நான் படித்து வந்த பாரம்பரிய பக்தி நூல்களுடன் சமகாலத்திய ஞானமார்க்கப் புத்தகங்களும் என் படிக்கும் பட்டியலில் சேர்ந்துகொண்டன. இறைவன் வடிவத்துடன் தோன்றுவதை எதிர்பார்ப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். இறைத்தன்மை தொடர்பான என்னுடைய தனிநிலைக் கோட்பாடு, தொடர்நிலைக் கோட்பாடாக மேம்படுத்தப்பட்டு விட்டது. இருப்பினும், இறைவனை இன்னும் காணவில்லையே என்ற உள்ளார்ந்த வருத்தம் தீர்ந்தபாடில்லை – அதைத்தானே வாழ்வின் பிரதானக் குறிக்கோளாக எண்ணி இருந்தேன்?
அந்த ஆலைக்கு வந்து சேர்ந்த போது மாலையாகி இருந்தது. ஒரு மணி நேரத்தில் என் தொழில்முறை வேலை முடிந்துவிட்டது. மறுநாள் காலைதான் திரும்புவதாக இருந்ததால், ஆலையின் விருந்தினர் மாளிகையில் தங்கினேன். இரவு உணவு முடிந்து, தூங்கச் செல்லும் முன்பாக, மேலாளரிடம் அதிகாலை 5 மணிக்கு அறைக்கு தேநீர் அனுப்பச் சொன்னேன். ஐந்து மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டுத் தூங்கிவிட்டேன்.
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்தபோது, தியானம் செய்யத் தோன்றியதால், கட்டில் மேல் அமர்ந்தபடியே தியானம் செய்யத் தொடங்கினேன். கண்கள் மூடியிருக்க, செவிகள் அறையின் ஜன்னல் ஏர்-கண்டிஷனர் எழுப்பிய தொடர்ச்சியான சன்னமான ஒலியை கவனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தன. ஓர் ஐந்து நிமிடம் சென்றிருக்கலாம்; அழைப்பு மணி ஓசை கேட்டது. ஏன் ஐந்து மணிக்கே மேலாளர் தேநீர் அனுப்பினார் என்று யோசித்துக்கொண்டே, தியானத்தை முடித்துக்கொண்டு, கதவைத் திறந்தேன்.
தேநீர் அருந்திக்கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது, அது ஐந்து நாற்பது என்றது; என்னால் நம்ப முடியவில்லை.
காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிப் பயணித்தபோது, தலைக்குள் சற்று வித்தியாசமாக உணர்ந்தேன். என் கண்களின் பார்வையிலும், அதனை என் மூளை உணர்ந்துகொள்ளும் விதத்திலும் தெளிவான ஒரு வித்தியாசம் தெரிந்தது. என்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வெட்ட வெளியை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது – வெளி முழுவதும் ஏதோ ஒன்று பரவி நிற்பதை வெறித்துப் பார்ப்பதைப் போல. உண்மையில், அந்த ஐந்து மணி நேரப் பயணம் முழுவதுமே காரின் ஜன்னல் வழியே வெளியை வெறித்துப் பார்த்துக்கொண்டேதான் பயணித்தேன். என் மனம் அசாதாரணமான அமைதியில் இருந்தது; எதனையும் சிந்திக்கவோ, பார்க்கும் எதனையும் பற்றி யோசிக்கவோ விரும்பவில்லை. என் புத்தியோ, என் கண்களுக்கும் மூளைக்கும் என்னவாயிற்று என்று அதிசயித்தது.
இரண்டு மாதங்கள் இத்தகைய நிலை நீடித்தது. பிறகு ஒரு நாள் தியானத்தில் அமர்ந்த போது, என் மூளையில் வித்தியாசமான ஒரு நிகழ்வை கவனித்தேன். எப்போதாவது கேட்கும் வெளி ஒலியை கேட்டுக்கொண்டிருந்தேன். அவ்வப்போது மனத்தில் எழும் எண்ணங்களை எண்ணிக்கொண்டிருந்தேன். அடுத்த நிகழ்வுதான் முக்கியமானது. அதுதான் இந்த இரண்டு மாதங்களாக என் மூளைக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கியது. வெளியில் எழும் ஒலியை நான் கேட்டுக்கொண்டிருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது; என் எண்ணங்களை நான் எண்ணுவதை என்னால் கவனிக்க முடிந்தது.
என்னுடைய மூளை செயல்படும் விதத்தில் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டது. முதல் இரண்டு செயல்பாடுகளும் வழக்கமானவைதான் – வெளி ஒலி முதலான புலன்களை உள்வாங்கி உணர்வது ஒன்று; எண்ணங்களைத் தோற்றுவித்து மதிப்பீடு செய்வது மற்றொன்று. மூளையின் இவ்விரண்டு செயல்பாடுகளிலும் யாதொரு புதுமையும் இல்லை. ஆனால், மேற்சொன்ன இரண்டு செயல்பாடுகளையும் கவனிக்கும் மூன்றாவது செயல்பாடுதான் மிகவும் புதுமையாக, நான் அதுவரையில் அறிந்திராத ஒன்றாக இருந்தது.
நான் என்பது யார்? கேட்பவனும் சிந்திப்பவனுமான அவனா, கேட்பதையும் சிந்திப்பதையும் கவனிக்கும் இவனா? இந்தக் கேள்விக்கு விடை காண, நான் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
No comments:
Post a Comment