"Although people go to the Supreme Abode of God daily, they do not know about it, just as people frequently walking over a treasure of gold do not know about it."
~ Sama Veda - Chandogya Upanishad(8-3-2).
You are daily visiting the Lord in your
heart. Think I’m kidding? No, I’m serious. I repeat. You are daily visiting the
Lord of this universe. Yes, the very same Lord Who created this universe.
Spirituality cannot be confined to a
particular religion. It refers to the one and only Truth which is commonly
shared by all religions. Lord cannot be confined to the Father of Christianity
or Hari of Hinduism or Allah of Islam, but Lord can be referred to as Hari,
Father or Allah. Thus, Who is referred to as Hari is exactly identical to Who
is referred to as Father or Who is referred to as Allah. Yet, we have fought
fierce battles between nations in the name of religion and killed a lot of
people.
If you expect the innate form of Lord to be
human-like with four hands resting on His serpent bed on the celestial Ocean or
to be human-like with long beard strolling on the celestial Garden, you will be
disappointed.
If you think you can ask Him a few
questions on His perceived ignorance in running the affairs of the world when
you meet Lord, you will again be disappointed.
All such nonsense we think about Lord because
we believe we are our body-mind-heart and nothing beyond that. If we are the
Self that is all-pervading this universe, how can we expect Lord to be anyone
inferior to us?
When we meet the real Lord in the spiritual
realm, we won’t even exist separately from Him to ask Him questions. Our Self cannot
exist as separate Entity when It perceives Lord. Unless Lord immerses our Self
into Him and dissolves us in Him, we can never perceive Him.
You may be a Hindu or Christian or Muslim,
or you may not belong to any particular religion - you’ll see the same Lord
I’ve seen. That is because there is only one Lord for this entire universe. And
that Lord is residing in your heart as well as my heart. He is not confined to
the limited geographical area of your heart. When you try to see Him, He takes
His infinite Cosmic size.
On continuing my meditation on expanded
Consciousness with my eyes closed, my Self was immersed in the Lord of the
universe. The pleasantness of the Lord stunned my intellect principle, the
reasoning faculty of the mind, to such an extent that the duality of Subject
and Object disappeared.
Do you remember how you felt during your
dreamless deep sleep? A pleasant peaceful state, isn’t it? It happened when
your Self was immersed into the Lord of this universe residing at your heart,
of course, with your limiting ego principle intact.
Fine, what is the practical use of
realization of expanded Lord investing our enormous effort and time while we
are daily visiting Him free of cost, though in His limited size and unconsciously?
Happiness. Your inner core will always be
pleasant even when your mind, body and heart face unpleasant events and
circumstances in your life. You gain control over your Negative Energy packed
in the form of Malice, Anxiety and Intolerance. I have discussed this point and
its effects in adequate detail in my book titled “Secrets of Manifestation”.
To sum up I have listed below the chronological
stages of Enlightenment by Surrender as enumerated by Nammazhvar in his
excellent work Thiruvaimozhi:
* Discrimination of Consciousness from the Body-Mind-Heart.
* Internal Separation of Consciousness from
the Mind.
* Immersion of Consciousness in the
universal Consciousness in the Mind.
* Internal Separation of Consciousness,
immersed in the universal Consciousness, from the Body.
* Internal Separation of Consciousness,
immersed in the universal Consciousness, from the Heart.
* Expansion of Consciousness due to weakening
of Ego principle.
* Realization of Self in the expanded
Consciousness due to emptying of Mind principle.
* Immersion of Self in the universal Self,
the Lord of the universe residing at the Heart.
6. என் நெஞ்சில் உலகை ஆளும் இறைவனின் தரிசனம்
“தங்கப் புதையல் மேல் மக்கள் அடிக்கடி நடந்த போதும் எப்படி அதனை அறிவதில்லையோ, அது போல, தினந்தோறும் இறைவனின் பரமபதத்துக்குச் சென்று வந்தாலும் மக்கள் அதைப் பற்றி அறிவதில்லை.”
~ சாம வேதம் – சாந்தோக்ய உபநிஷத் (8-3-2).
தினமும் உங்கள் நெஞ்சில் விளங்கும் ஈசுவரனை நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். விளையாடுகிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை, உள்ளதைத்தான் சொல்கிறேன். இவ்வுலகை ஆளும் இறைவனை தினந்தோறும் நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். இவ்வுலகைப் படைத்த அதே இறைவனைத்தான் சொல்கிறேன்.
ஆன்மீகத்தை எந்த ஒரு மதத்துக்குள்ளும் அடைத்துவிட முடியாது. அது எல்லா மதங்களாலும் பகிர்ந்து கொள்ளப்படும் ஓர் உண்மையாகும் – ஒரே உண்மையாகும். இறைவனை கிறிஸ்துவ மதத்தின் பிதாவுக்குள்ளோ இந்து மதத்தின் ஹரிக்குள்ளோ இஸ்லாம் மதத்தின் அல்லாஹ்வுக்குள்ளோ அடக்கிவிட முடியாது; ஆனால், இறைவனை பிதா என்றும் ஹரி என்றும் அல்லாஹ் என்றும் குறிப்பிடலாம். ஆகவே, யாரை ஹரி என்று குறிப்பிடுகிறோமோ, அச்சு அசலாக அவரையே பிதா என்று குறிப்பிடுகிறோம்; யாரை அல்லாஹ் என்று குறிப்பிடுகிறோமோ, அச்சு அசலாக அவரையே ஹரி என்று குறிப்பிடுகிறோம். இருப்பினும், ஆன்மீக அறியாமையால், மதத்தின் பெயரால் பல போர்களை மேற்கொண்டு ஏராளமான மக்களைக் கொன்று குவித்திருக்கிறோம்; பல புனிதர்களுக்கும் இன்னலை விளைவித்திருக்கிறோம்.
இறைவனுடைய இயல்பான வடிவம், மனிதர்களைப் போல இருக்கும் என்று நம்பினோமானால் நாம் ஏமாற்றம்தான் அடைவோம். இறைவனைப் பார்க்கும் போது, இந்த உலகத்தை அவன் நடத்தும் விதத்தைப் பற்றி அவனிடம் நறுக்கென்று நாலு கேள்வி கேட்கலாம் என்று நீங்கள் நினைத்திருந்தாலும் நீங்கள் ஏமாற்றமே அடைவீர்கள்.
இறைவனைப் பற்றிய இத்தகைய அறிவீனமான கருத்துக்கள் எல்லாம் நமக்கு இருப்பதற்குக் காரணம், நம்மைப் பற்றிய அறிவீனமான கருத்துக்கள்தாம். நாம் உடல்-மனம்-நெஞ்சம் மட்டுமே, அதனைத் தாண்டி ஏதுமில்லை என்ற ஆன்மீக அறியாமைதான். நாமே இவ்வுலகமெங்கும் பரவி விரவி நிற்கும் ஆத்மா எனில், நம்மை ஆளும் இறைவன், நம்மை விடவும் அளவிலும் அறிவிலும் சக்தியிலும் குறைவுபட்டு இருப்பானா, என்ன?
நீங்கள் இந்துவாக இருக்கலாம், கிறிஸ்துவராக இருக்கலாம், முஸ்லீமாக இருக்கலாம், அல்லது, எந்த மதத்தையும் சேராதவராகவும் இருக்கலாம் – நான் பார்த்த அதே இறைவனைத்தான் நீங்களும் காண்பீர்கள். ஏனென்றால், இந்த உலகம் முழுவதற்கும் ஒரே ஓர் இறைவன்தான் இருக்கிறான். அந்த இறைவன்தான் உங்கள் நெஞ்சிலும் இருக்கிறான், எனது நெஞ்சிலும் இருக்கிறான். ஆனால், அவன் உங்களுடைய நெஞ்சின் பௌதிக வரையறைக்கு உட்பட்டவன் அல்ல. அவனை நீங்கள் காண முயலும் போது, அவன் தன்னுடைய விசுவரூபத்தை எடுத்துத்தான் தரிசனம் தருவான்.
கண்கள் மூடிய நிலையில், என் விரிவடைந்த உயிருணர்வின் மீது தொடர்ந்து தியானம் செய்தபோது, என் ஆத்மா, இறைப்புலத்தில் மூழ்கியது. இறைப்புலத்தின் இனிமையால் என் புத்தியின் சலனம் நிறுத்தப்பட்டு, தன்னைத் தான் உணரும் நான்தன்மையும் கரைந்தது.
கனவுமற்ற ஆழ்நிலை தூக்கத்தில் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இனிமை பொருந்திய அமைதியான ஒரு நிலை, இல்லையா? அது உங்களுடைய ஆத்மா உங்கள் நெஞ்சில் விளங்கும் இறைவனுக்குள் மூழ்கிக் கரைந்துவிடுவதால் உண்டாகும் நிலை. ஆனால், இது தன்னுணர்வின்றி நிகழும் அனுபவம்.
சரி, இவ்வளவு காலமும் முயற்சியும் முதலீடு செய்து, ஆன்மீகப் பயணம் செய்து, உயிருணர்வை வேறுபடுத்தி, பிரித்து, சரணாகதி செய்து, ஆத்ம ஞானம் பெற்று, தன்னுணர்வுடன் தன் ஆத்மாவை இறைவனுடன் ஐக்கியப்படுத்துவதால் என்ன பயன்? அதுதான், தினமும், தன்னுணர்வு இல்லாமலேனும், யாதொரு செலவும் முயற்சியும் இல்லாமலே, இறைவனுடன் ஐக்கிய நிலை அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுதானே இருக்கிறோம்?
மகிழ்ச்சி. உங்கள் மனமும் உடலும் நெஞ்சமும் இனிமையற்ற நிகழ்வுகளையும் சூழல்களையும் வாழ்வில் சந்திக்கும் போதும், உங்கள் உள்நிலை எப்போதும் இனிமையில் திளைத்து நிற்கும். வெறுப்பு, பதற்றம், ஏற்றுக்கொள்ள இயலாமை என்ற மூவகை எதிர்மறை ஆற்றலை எதிர்கொண்டு, அவற்றை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் மிக எளிதாகக் கொண்டுவர இயலும்.
இறுதியாக, சரணாகதி மூலமாக ஆன்மீக ஞானமடைந்து இறைவனுடன் ஐக்கிய அனுபவம் பெறும் ஆன்மீக யாத்திரையின் காலமுறைப் படிநிலைகளை, திருவாய்மொழியில் நம்மாழ்வார் குறிப்பிட்டுள்ளவாறு, கீழே கொடுத்துள்ளேன்:
* மனம்-உடல்-நெஞ்சத்திலிருந்து உயிருணர்வை வேறுபடுத்தி அனுபவத்தில் அறிவது.
* மனத்திலிருந்து உயிருணர்வை உள்முகமாகப் பிரிப்பது.
* மனத்தில் உள்ள இறைஉயிருணர்வில் உயிருணர்வை ஒருங்கிணைப்பது.
* மனத்தில் உள்ள இறைஉயிருணர்வில் உயிருணர்வை மூழ்குவிப்பது.
* உடலில் உள்ள இறைஉயிருணர்வில் மூழ்குவித்த உயிருணர்வை உடலில் இருந்து உள்முகமாகப் பிரிப்பது.
* நெஞ்சில் உள்ள இறைஉயிருணர்வில் மூழ்குவித்த உயிருணர்வை நெஞ்சில் இருந்து உள்முகமாகப் பிரிப்பது.
* தன்முனைப்புத் தத்துவம் வலுவிழந்து, உயிருணர்வு விரிவடைவது.
* மன தத்துவம் காலியாகி, விரிவடைந்த உயிருணர்வு தெளிவடைந்து, ஆத்ம தரிசனம் பெறுவது.
* ஆத்மா, பரமாத்மாவில் கரைந்து, பரமாத்மாவுடன் ஐக்கியமடைவது.
No comments:
Post a Comment