Sunday, 27 July 2025

4. Surrender

I am the same to all beings – I dislike none and I like none. But those who worship Me with Love abide in Me, and I also abide in them.

~ Sri Krishna (BG 9:29).


An eighty year old man residing at a village near the southern tip of India went on his spiritual quest to a holy city in north India. He spent a few years there worrying if he’d meet a suitable preceptor to get enlightenment before death. One day he saw a strange light on the southern horizon.

As he travelled southward towards the light, the light also moved farther south. Ultimately, he reached a village very near to his native village. The light disappeared into the temple of the village.

On entering the temple, the old man enquired the people there if anything special happened there in the recent years. They pointed out the gigantic tamarind tree standing inside the temple premises and said that a young Yogi was staying there for a few years.

The old man went to the Yogi and questioned him, “What does the embryo inside the dead feed on and where does it live?”

The Yogi answered him, “It feeds on it and lives there” meaning that the Self embodied would identify itself with non-Self like body and mind, and enjoy the experiences of the latter.

Then the old man accepted the young Yogi as his preceptor and got enlightened by His instructions.

That Yogi was Nammazhvar who lived for about thirty years under that tamarind tree in that temple in the eighth century. He compiled His instructions in the form of a great poetic work, popularly known as Thiruvaimozhi, comprising about one thousand Tamil songs.

Thiruvaimozhi is His spiritual autobiography explaining how He got enlightened by means of the spiritual tool called Surrender. He has clearly outlined the process of surrendering one’s individuated Consciousness to the universal Consciousness of God in chronological sequence. More important, He has described each stage of His enlightenment process.

I’ve visited that temple three, four times to see the tamarind tree under which Nammazhvar lived. It is still there intact. I’ve always used Thiruvaimozhi as the blueprint for my spiritual progress. Until I got an experience that matched the description of a particular stage in Thiruvaimozhi, I won’t accept that I had progressed to that stage.

Our Consciousness is our life force that drives our body, mind and heart. But for our Consciousness, we cannot do any action, we cannot think any thought and we cannot desire anything. However, just as we cannot see our eyes although we see everything else with our eyes, we are unable to perceive our Consciousness. We need a mirror to see our Consciousness. And that mirror is universal Consciousness.

Suppose that you receive a call from the class teacher of the school your kid is studying in. She informs you that your kid has collapsed and the doctor is examining her. You rush to school, fearing all sorts of negative possibilities and saying your prayers out of anxiety. You drive your car mechanically. You don’t remember if you locked the door while leaving home. You see the heavy traffic before you, but nothing is registered in your brain.

When you reach the school and see your kid talking normally to the class teacher, and the doctor tells you not to worry, how would you feel?

Suddenly all your anxiety disappears to leave your mind relieved at peace. When you return home, your brain now registers clearly the whole traffic around you. You do remember you forgot to lock the door.

We often take our default state of Peace for granted. It is transmitted by our Consciousness from the universal Consciousness. Whenever our mind is tossed by intense anxiety, our Consciousness buried deep into the mind fails to transmit the Peace of universal Consciousness.

Suppose we are able to internally separate our Consciousness and get it merged with universal Consciousness, then we’ll perceive the state of Peace even when our mind is agitated by anxiety. Then we are deemed to have surrendered our Consciousness to the universal Consciousness of God.

Consciousness can be internally discriminated and separated from our mind, body and heart, and merged with universal Consciousness therein. In fact, it is done in that chronological sequence.

When our Consciousness gets merged with universal Consciousness within us, we can perceive our entire body completely filled with universal Consciousness. Suppose you haven’t done any cardio exercise for many months. One fine morning you decide to exercise in the cross trainer for ten to fifteen minutes. How will you feel after an hour? Won’t you feel the lightness throughout the body? Won’t you feel that the heaviness of your legs has suddenly disappeared while walking? Or suppose that you are trapped in a congested place for hours. When you come out in the free space and breathe in plenty of pure outside air, won’t you feel lightness? Your body filled up with universal Consciousness will feel similar to that if you meditate on it. But there is much more than that.

I used these similes to convey one part of experience. There is much more. You will be at Peace at your inner core even when your mind, body and heart are tossed and torn apart by anxiety, intolerance and malice - at the absolute Peace that is characteristic of universal Consciousness; it cannot be disturbed by external events or circumstances. Right now, you can’t even imagine it. When you face challenges in your life in the form of unfavorable and unpleasant events and circumstances, you can’t even imagine maintaining your inner core at Peace.

When your being or inner core is at Peace, your mind, body and heart cannot maintain anxiety, intolerance and malice for a longer period. I have discussed this point and its effects in adequate detail in my book titled “Secrets of Manifestation”.

It took, for me, four long years for the process of internal separation of Consciousness from mind, body and heart and its merger with the universal Consciousness, to be completed. After that I was ready to pursue the question ‘Who am I?’


4. சரணாகதி


“எல்லோரும் எனக்கு சமமே – எனக்குப் பிடிக்காதவர்கள் என்றோ பிடித்தவர்கள் என்றோ எவரும் இல்லை. ஆனால், எவர்கள் என்னைத் தூய அன்புடன் வழிபட வல்லவர்களோ, அவர்கள் ஆன்மீக ரீதியாக என்னிடம் இருக்கிறார்கள்; நான் ஆன்மீக ரீதியாக அவர்களிடம் இருக்கிறேன்.”

~ ஸ்ரீகிருஷ்ணன் (ப.கீ. 9:29).

தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டம் ஒன்றிலிருந்த கிராமத்தில் வசித்து வந்த எண்பது வயதான பெரியவர் ஒருவர், வட இந்தியாவிலுள்ள புனித இடம் ஒன்றுக்கு ஆன்மீக வேட்கையுடன் பயணித்தார். இறப்பதற்கு முன்னதாக தான் ஆன்மீக ஞானமடைய வசதியாக, தகுதியான ஓர் ஆச்சார்யரைத் தேடி சில காலம் அங்கே செலவிட்டார். ஒரு நாள், இவருடைய கண்ணுக்கு தெற்கு வானில் ஒளிக்கீற்று ஒன்று தோன்றியது.

அந்த ஒளிக்கீற்றைக் குறிவைத்து இவரும் பயணிக்க, அது மேலும் தெற்கு நோக்கி நகர்ந்தது. இறுதியாக, அது இவருடைய பிறந்த கிராமத்துக்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்தின் கோவிலுக்குள் சென்று மறைந்துவிட்டது.

கோவிலுக்குள் நுழைந்த அந்தப் பெரியவர், சமீப காலத்தில் கோயிலில் ஏதேனும் விசேஷம் உண்டா என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். அவர்களும், கோயில் உள்ளே வளர்ந்திருக்கும் பிரம்மாண்டமான புளிய மரத்தின் அடியில், சில வருடங்களாக இளைஞனான ஒரு யோகி அமர்ந்து தியானம் செய்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த வயதானவரும் அந்த இளைஞனாக இருந்த யோகியிடம் சென்று, அவருடைய ஆத்ம ஞானத்தைச் சோதிக்க எண்ணி, “செத்ததன் வயிற்றில் சிறியது கிடந்தால், எத்தைத் தின்று எங்கே வாழும்?” என்று கேட்க, அந்த யோகியும் உடனே, “அத்தைத் தின்று அங்கே வாழும்” என்று, உடலெடுத்த ஜீவாத்மா தன்னை உடல்-மனம்-நெஞ்சத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டு, அவற்றின் அனுபவங்களைத் தனது அனுபவங்களாக எண்ணி வாழும் என்ற பொருளில் பதில் சொன்னார். பெரியவரும் உடனே அவரை வணங்கித் தன்னை சீடராக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். இளைய யோகி ஆச்சார்யனின் உபதேசம் பெற்று, இறுதியில் அந்தப் பெரியவர் ஆன்மீக ஞானமும் அடைந்தார்.

எட்டாம் நூற்றாண்டில் ஆழ்வார் திருநகரி கோயிலின் புளிய மரத்தின் அடியில் முப்பது வருடங்கள் வாழ்ந்த அந்த இளைய யோகியின் பெயர் நம்மாழ்வார். அவர் தன்னுடைய ஆன்மீக உபதேசங்களை, ஆயிரம் தமிழ்ப் பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழி என்னும் மிகச்சிறந்த நூலாக ஆக்கி நமக்குத் தந்துள்ளார்.

திருவாய்மொழி உண்மையில், சரணாகதி என்னும் ஆன்மீக சாதனையைக் கடைப்பிடித்து, ஆன்மீக ஞானமடைந்த நம்மாழ்வாருடைய ஆன்மீக யாத்திரை சுயசரிதை நூலாகும். தன்னுடைய தனித்த உயிருணர்வை இறைஉயிருணர்வுடன் ஒருங்கிணைக்கும் சரணாகதி மார்க்கத்தை, மிகத் தெளிவாக ஆழ்வார், திருவாய்மொழியில் பாடியுள்ளார். ஆத்மாவின் ஆன்மீகப் பயணத்தின் ஒவ்வொரு படி நிலையையும் ஒன்றுவிடாமல் வரிசைக்கிரமமாக விளக்கமாக விவரித்துள்ளார்.

நம்மாழ்வாரால் புனிதப்படுத்தப்பட்ட ஆழ்வார் திருநகரியில் இன்றும் வாழும் அந்தப் புளியமரத்தைக் காண்பதற்காக மூன்று நான்கு முறை அங்கு சென்றிருக்கிறேன். திருவாய்மொழியை என் ஆன்மீகப் பயணத்துக்கான அடிப்படை செயல்திட்டமாகக் கருதியிருந்தேன். திருவாய்மொழியில் விவரிக்கப்பட்ட அடுத்த கட்ட ஆத்ம நிலையும் என் ஆன்மீக அனுபவமும் ஒத்துப்போகும் வரையில், அந்த நிலையை நான் அடைந்துவிட்டதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நம்முடைய உயிருணர்வுதான், நம் உடல் மனம் நெஞ்சத்தை இயக்கும் உயிர்மை சக்தியாகும். உயிருணர்வு இல்லாவிட்டால், நம்மால் எந்தச் செயலையும் செய்ய இயலாது; எந்த எண்ணத்தையும் எண்ண இயலாது; எதனையும் ஆசைப்படவும் இயலாது. இருப்பினும், எப்படி எல்லாவற்றையும் காண உதவும் நம் கண்களை நம்மால் காண இயலாதோ, அப்படியே உயிருணர்வையும் நம்மால் உணர இயலாது. நம் உயிருணர்வைக் காண ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது. அந்தக் கண்ணாடிதான் இறைஉயிருணர்வு.

உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் வகுப்பாசிரியையிடம் இருந்து உங்களுக்கு ஓர் அழைப்பு வருகிறது என்று கொள்வோம். உங்கள் குழந்தை மயக்கமடைந்து விட்டதாகவும் மருத்துவர் பரிசோதித்து வருகிறார் என்று ஆசிரியை சொல்வதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் பதற்றத்துடன் பள்ளிக்கு விரைகிறீர்கள். உங்கள் காரை இயந்திரத்தனமாக ஓட்டிச் செல்கிறீர்கள். வீட்டுக் கதவைப் பூட்டினோமா என்று ஞாபகம் இல்லை. கண்ணில் தெரியும் போக்குவரத்து நெரிசல் எதுவும் மூளையில் பதிவாகவில்லை.

பள்ளியை அடைந்து, உங்கள் குழந்தை வகுப்பாசிரியையிடம் இயல்பாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்; மருத்துவர், பயப்படும்படி ஏதுமில்லை என்று உங்களிடம் சொல்கிறார். நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

சட்டென்று உங்கள் பதற்றம் எல்லாம் மறைந்து, உங்கள் மனம் அமைதி அடைந்துவிடும், இல்லையா? வீட்டுக்குத் திரும்பும்போது, உங்கள் மூளை போக்குவரத்து நெரிசலைத் தெளிவாக பதிவுசெய்யும். வீட்டைப் பூட்டவில்லை என்பதும் ஞாபகம் வரும்.

இயல்பு நிலையில் நாம் இருக்கும் போது நாம் உணரும் அமைதியைப் பெரும்பாலும் நாம் லட்சியம் செய்வதில்லை. அது நம்முள் இருக்கும் இறைஉயிருணர்வின் அமைதியை, நம் உயிருணர்வு நமக்குக் கடத்துவதால் நம்மால் உணரப்படுகிறது. நம் மனம் கடுமையான பதற்றத்தால் பந்தாடப்படும் போது, நம் மனத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் நம் உயிருணர்வு, இறைஉயிருணர்வின் அமைதியை நமக்குக் கடத்த இயலாமல் போகிறது.

நம் உயிருணர்வை உள்முகமாகப் பிரித்து, இறைஉயிருணர்வுடன் ஒருங்கிணைக்க முடிந்தது என்று வைத்துக்கொள்வோம்; அப்போது, நம் மனம் பதற்றத்தால் பந்தாடப்படும் போதும்கூட, நம்மால் உள்நிலை அமைதியை உணர இயலும். அத்தகைய நிலையில், நாம் நம் உயிருணர்வை இறைஉயிருணர்வில் சரணாகதி செய்துள்ளதாக அறியப்படுகிறோம்.

நம் உயிருணர்வை நம் மனத்திலிருந்தும் உடலிலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் உள்முகமாக வேறுபடுத்தி, பிரித்து, அங்கிருக்கும் இறைஉயிருணர்வில் ஒருங்கிணைக்க இயலும். அந்தக் காலவரிசையில்தான் அது சாதிக்கப்படுகிறது.

நம் உயிருணர்வு நம்முள் விளங்கும் இறைஉயிருணர்வுடன் ஒருங்கிணைக்கப்படும் போது, நம் உடல் முழுவதுமே இறைஉயிருணர்வால் நிரம்பி இருப்பதை உணர முடியும். பல மாதங்களாக நீங்கள் இதயத்துக்கான தேகப்பயிற்சி ஏதும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று ஒரு நாள், பத்துப் பதினைந்து நிமிடங்கள் கிராஸ் ட்ரெயினரில் தேகப்பயிற்சி செய்கிறீர்கள். ஒரு மணி நேரம் கழித்து எப்படி உணர்வீர்கள்? உடல் சற்று லகுவாகி விட்டது போல் உணர்வீர்கள், இல்லையா? நடக்கும்போது கால்களின் கனம் சற்றே குறைந்து விட்டது போல உணர்வீர்கள், இல்லையா? அல்லது, மூச்சு முட்டக்கூடிய ஜன நெரிசலான அறையில் அகப்பட்டுக் கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அறைக்கு வெளியே வந்து சற்று நேரம் தடையற்ற காற்றை சுவாசிக்கும் போது, கொஞ்சம் லகுவாக உணரமாட்டீர்கள்? உங்கள் உடல் இறைஉயிருணர்வால் நிரப்பப்படும் போதும், அதனை தியானிக்கும் போது, ஏறக்குறைய இப்படித்தான் உணர்வீர்கள். ஆனால், இது மட்டும் அல்ல.

இந்த உதாரணங்களை எல்லாம் இறைஉயிருணர்வு அனுபவத்தின் ஓர் அம்சத்தை விளக்குவதற்காகச் சொன்னேன். இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன. உங்கள் மனமும் உடலும் நெஞ்சமும், எதிர்மறை ஆற்றலின் அம்சங்களான பதற்றத்தாலும் ஏற்றுக்கொள்ள இயலாமையாலும் வெறுப்பினாலும் பந்தாடப்பட்டு கிழிக்கப்படும் போதும், உங்கள் உள்நிலையில் அமைதி நிலவும் – இறைஉயிருணர்வின் இயல்பான அமைதியை எப்போதும் பிரதிபலிக்கும்; வெளி நிகழ்வுகளோ சூழல்களோ அதனை எவ்வகையிலும் பாதிக்க இயலாது. தற்போதைய உங்கள் நிலையில் நீங்கள் இதனைக் கற்பனைகூட செய்து பார்க்க இயலாது. சாதகமற்ற மகிழ்ச்சியற்ற நிகழ்வுகளும் சூழல்களுமாக வாழ்வில் வரும் சோதனைகளை எதிர்கொள்ள நேரும் போது, உங்கள் உள்நிலையில் அமைதி நிலவுவதை உங்களால் கற்பனையில் கூட சிந்திக்க இயலாது.

உங்கள் உள்நிலையில் அமைதி தவழும் போது, உங்கள் மனமும் உடலும் நெஞ்சமும், எதிர்மறை ஆற்றலின் அம்சங்களான பதற்றத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாமையையும் வெறுப்பையும் நீண்ட நேரத்துக்கு தாக்குப் பிடிக்க இயலாது.

மனம்-உடல்-நெஞ்சத்திலிருந்து உள்முகமாகப் பிரிக்கப்பட்ட உயிருணர்வு, இறைஉயிருணர்வுடன் ஒருங்கிணைக்கப்படும் இந்த சரணாகதி சாதனை நிறைவு பெறுவதற்கு எனக்கு நான்கு வருட காலம் தேவைப்பட்டது. அதன் பிறகு, ‘நான் என்பது யார்?’ என்ற விசாரணையைத் தொடங்குவதற்கு ஆயத்தமானேன்.

No comments:

Post a Comment