“This is a miracle that men can love God, yet fail to love humanity. With whom are they in love then?...To feel and love the God of beauty and good, in the ugly and the evil, and still yearn in utter love to heal it of its ugliness and its evil - this is real virtue and morality…If you cannot love the vilest worm and the foulest of criminals, how can you believe that you have accepted God in your spirit?”
~ Sri Aurobindo.
A lady from Bombay travelled to a remote
village in Central India to see a Saint living there. She stayed as a paying
guest in a home in that village. One day during lunch time when she was taking
lunch there, a stray dog came there and barked. Sensing that the dog was
hungry, she threw a piece of bread at the dog. It ate the bread piece and went
away.
After finishing her lunch, she went to see
the Saint. On seeing her, the Saint said, “Mother, you fed Me sumptuously up to my throat. My afflicted life
forces have been satisfied. Ever act like this, and this will keep you in good
state. Sitting in this Mosque, I shall never, never speak untruth. Take pity on
Me like this. First give bread to the hungry and then eat yourself. Note this
well.”
Confused by these
words of the Saint, she replied, “How could I feed you? I am myself staying as
a paying guest here. I didn’t.”
Then the Saint gave her the wonderful reply
- I’ll never forget this reply along with the story in my entire life. Even if
I go to the Himalayas and spend half of my life there, I’ll never get such an
instruction from any preceptor living there.
Then the Saint
replied, “Eating that lovely bread I am still belching. The dog which you saw
before meals and to which you gave the piece of bread, is one with Me; so also
other creatures. I am roaming in their forms. He who sees Me in all these
creatures is My beloved. So, abandon the sense of duality and distinction and
serve Me as you did today.”
This one story with this instruction of
nectar changed the quality of my life forever. I have read in Bhagavad Gita
wherein Sri Krishna says He is A to Z of this universe. But on reading this
story wherein Shirdi Sai Baba has practically demonstrated the abstract
complicated spiritual philosophy that God lives in and as every creature of
this universe, the doctrine went straight into the bottom of my heart.
Before that, I imagined that the Lord of
this universe had a form, possibly with four hands. I believed that as I went
on spending my life singing His praise, one day He’d suddenly appear before me in
that form, being pleased with my praise. Though I didn’t have anything in
particular to ask for, I craved for seeing Him. I strongly believed that the
very purpose of life was to see the Lord of the universe in all His splendor
right before my eyes.
I had spent many hours of many days and
nights wondering why He was still testing me. I used to go to my favorite
temple to question Him what else He expected from me to shower His mercy on me.
I was wondering if He, sitting in the spiritual sky up above and beyond this
material universe, would ever descend down to earth before my eyes. I was
losing hope.
Then this story with this instruction
changed my concept of Lord. I stopped looking up at the sky in search of Lord.
Instead, I started worshipping Him in every creature I saw before my eyes.
People, dogs, cows, pigs, trees - any living creature I saw. Yet the Lord was
still elusive. This crazy quest went on for a few years; after that Baba
inspired in me another powerful instruction that was designed to raze my
beautiful palace of devotional faith to ground.
1. வழிகாட்டி
“என்ன அதிசயம், இறைவனை நேசிக்க முடிகிறது, ஆனால், மனிதகுலத்தை நேசிக்க முடியவில்லை. பிறகு, யாரை இவர்கள் நேசிக்கிறார்கள்?... அழகற்றவரிடமும் தீயவரிடமும் விளங்கும் அழகும் நன்மையும் பொருந்திய இறைமையைக் கண்டு நேசித்துக்கொண்டே, அந்த அழகின்மையையும் தீமையையும் குணமாக்க, தூய அன்புடன் விரும்புவதல்லவா அறம்?... அற்பமான புழுவையும் மோசமான குற்றவாளியையும் உங்களால் நேசிக்க இயலவில்லை என்றால், இறைவனை ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டதாக எப்படி நீங்கள் நம்ப முடியும்?”
~ ஸ்ரீ அரவிந்தர்.
மும்பையைச் சேர்ந்த தற்காடு என்பவரின் மனைவி சீரடி ஸாயி பாபாவின் தீவிர பக்தை. அவர் ஒரு சமயம் சீரடி வந்து அங்கிருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தார். ஒரு நாள் மதிய உணவு வேளையில் அவ்வீட்டிலிருந்த எல்லோரும் சாப்பிடத் தயாரானபோது, எங்கிருந்தோ அங்கு வந்த நாய் ஒன்று பசியுடன் குரைக்கத் தொடங்கியது. உடனே, தற்காடின் மனைவி எழுந்து ரொட்டித் துண்டு ஒன்றை அந்த நாய்க்குப் போட்டார். நாயும் அதனை மிகுந்த ஆவலுடன் சுத்தமாகச் சாப்பிட்டுச் சென்றது.
அன்று மதியம் பாபாவைக் கண்டு வணங்கும் பொருட்டு அவர் மசூதிக்குச் சென்று ஓரமாக அமர்ந்தார். உடனே பாபா அவரை நோக்கி, “அம்மா, நீ இட்ட அந்த உணவைத் திருப்தியாக உண்டு மகிழ்ந்தேன். எப்போதும் இப்படியே செய்; அது உன்னை நல்ல நிலையில் வைத்திருக்கும் - இந்த மசூதியில் அமர்ந்துகொண்டு உண்மையல்லாததை ஒருபோதும், ஒருபோதும் பேசமாட்டேன். இதுபோல் என்னிடம் இரக்கங் காட்டு. முதலில் பசித்தவனுக்கு உணவளித்துவிட்டு, பின் நீ சாப்பிடு; இதை நன்றாக கவனத்தில் கொள்” என்றார்.
பாபாவின் வார்த்தைகளில் மிகுந்த குழப்பமடைந்த அவர், “பாபா, நான் எப்படி உங்களுக்கு உணவளித்திருக்க முடியும்? என் சாப்பாட்டுக்கே நான் மற்றவர்களை நம்பியல்லவா இருக்கிறேன்?” என்றார்.
அதற்கு பாபா சொன்ன அற்புதமான பதிலையும் இந்த நிகழ்வையும் என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க இயலாது. நான் ஒருவேளை இமய மலை சென்று வாழ்நாளில் பாதியைச் செலவிட்டாலும், அங்கு இருக்கும் எந்த ஓர் ஆச்சார்யனும் எனக்கு இப்படி ஓர் உபதேசம் செய்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
பாபா, “அந்த அருமையான ரொட்டியை உண்டு திருப்தியுற்றேன். உணவு வேளையின்போது எந்த நாய்க்கு ரொட்டித் துண்டை அளித்தாயோ, அந்த நாயும் நானும் ஒன்றே. எவன் சகல ஜீவராசிகளிலும் என்னைக் காண்கிறானோ, அவன் எனக்குப் பிரியமானவன். ஆகவே, இன்று போலவே என்றும் எனக்கு இவ்வாறு பணிவிடை செய்வாயாக” என்று அமுத மொழிகளைப் பகர்ந்தார்.
இந்த நிகழ்வும் அமுத மொழிகளும் என் வாழ்வின் தரத்தை நிரந்தரமாக மாற்றி அமைத்தது. தான் இவ்வுலகில் எல்லாருமாக எல்லாமுமாக இருப்பதாக ஸ்ரீகிருஷ்ணன் சொல்வதை பகவத் கீதையில் பலமுறை படித்திருக்கிறேன். ஆனால், புரிந்துகொள்ள மிகவும் கடினமான இந்த ஆன்மீகத் தத்துவத்தை இந்த நிகழ்வின் மூலமாக பாபா நடைமுறையில் நடத்திக் காட்டி விளக்கியதும், இக்கருத்து என் நெஞ்சின் ஆழத்துக்கு நேரே சென்றுவிட்டது.
முன்னதாக, இவ்வுலகை ஆளும் இறைவன் நான்கு கைகள் முதலிய வடிவத்துடன் கூடியவனாக இருப்பான் என்றே நான் நம்பிக்கொண்டிருந்தேன். என் ஓய்வு நேரத்தில் அந்த இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டே இருந்தால், அதில் திருப்தியடைந்தவனாக இறைவன், ஒரு நாள் திடீரென்று என் முன்னால் காட்சிகொடுத்து அருள்பாலிப்பான் என்று நம்பினேன். இறைவனிடம் குறிப்பிட்டுக் கேட்பதற்கு எனக்கு ஏதும் இல்லாத போதும், அவனைப் பார்த்துவிட வேண்டும் என்ற தணியாத ஏக்கம் எப்போதும் எனக்குள் இருந்து வந்தது. இந்த உலகையாளும் இறைவனை அவனுடைய தெய்வீக வடிவத்தில் என் கண் முன்னே காண்பதுதான் என் வாழ்வின் பிரதான குறிக்கோள் என்று உறுதியாக நம்பி இருந்தேன்.
‘ஏன் இன்னும் இறைவன் என்னை சோதிக்கிறான்?’ என்று எண்ணி, இறைவனைக் காணாத வருத்தத்தில் பல நாட்களை பல இரவுகளை பல மணி நேரங்களை செலவிட்டிருக்கிறேன். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அடிக்கடி சென்று, என்மீது கருணை காட்டுவதற்கு இறைவன் இன்னும் வேறு என்ன எதிர்பார்க்கிறான் என்று இறைவனைக் கேட்டுவந்தேன். என்றும் அழியாத நித்ய விபூதியான பரமபதத்தில் உயரே அமர்ந்துகொண்டு இந்த லீலா விபூதியை ஆளும் இறைவன், என்றாவது ஒரு நாள் என் கண்குளிரக் காணும்படிக்கு எனக்கு முன்னால் தோன்றுவான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். மாதங்கள் உருண்டோட என் நம்பிக்கை வலுவிழந்து கொண்டிருந்தது.
அத்தகைய காலகட்டத்தில்தான், இந்த நிகழ்வுக்கதையும் பாபாவின் அமுத மொழிகளும் இறைவனைப் பற்றிய என் கோட்பாட்டை மாற்றி விட்டது. இறைவனைத் தேடி விண்ணைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். மாறாக, நான் தினமும் காணும் அனைத்து உயிரினங்களிலும் இறைவன் உள்ளே இருப்பதாக பாவித்து, அந்த அந்தர்யாமி ஈசுவரனை வணங்கத் தொடங்கினேன். மனிதர்கள், நாய்கள், பூனைகள், மாடுகள், பன்றிகள், மரங்கள் என்று கண்ணில் கண்ட எந்த ஓர் உயிரினத்திலும் இறைவனை பாவித்து மானசீகமாக வணங்கத் தொடங்கினேன். இருப்பினும் இறைவன் எனக்கு அகப்படவில்லை. ஒரு சில வருடங்களுக்கு என்னுடைய இந்த வினோதமான தேடல் பயிற்சி தொடர்ந்தது. பின்னர், என் பக்தி மார்க்க சித்தாந்தமான அழகிய அரண்மனை தவிடுபொடி ஆகும்படிக்கு, பாபா என்னில் இன்னொரு சக்திவாய்ந்த உபதேசத்தை உணரச்செய்தார்.
No comments:
Post a Comment