“No one comes to the Father except through Me. If you really knew Me, you would know My Father as well”
~ Jesus Christ (Jn.14:6&7).
The youth who found formal education useless, left his home and travelled to a holy town. He stayed there and meditated on his Self to become a renowned jnani. He established his ashram there that is visited by thousands from all around the globe annually today. He advocated the non-dualistic school of thought and suggested Self-Enquiry for enlightenment.
A visitor asked this jnani, “That which rises as ‘I’ within us is the Self, isn’t it?”
And the jnani replied, “No; it is the ego that rises as ‘I’. That from which it arises is the Self.”
That was Ramana Maharishi. Although our I-ness (the sense of ‘I’) refers to our Self, he was very careful in his choice of words. That was because the yet-to-be-enlightened might mistake their Consciousness restrained by the ego principle as their Self.
My native town is only a few miles away from the native town of Ramana Maharishi. So, I have heard of his biography and spiritual achievements right from my childhood. I’ve visited Ramanashram two, three times during the process of my spiritual progress.
After our Consciousness is internally separated from our mind, body and heart, it is only a matter of time before our ego principle becomes imperceptible. It is the ego principle that limits our Consciousness to the boundary of our body. Once this ego principle becomes imperceptible, our Consciousness will cross the boundary of our body to the infinite space.
It doesn’t mean that when our Consciousness expands outside the boundary of our body, we’ll be able to be conscious of what is outside the boundary of our body. In other words, you can’t feel your presence anywhere outside your body; you can only perceive the presence of your Consciousness outside your body. It is NOT out-of-body experience.
Let me explain it further. Before the disappearance of ego principle, our Consciousness polarizes Itself into Subject and Object. It observes Itself. Just as It observes our mind thinking its thoughts, our body senses feeling their sense objects and our heart desiring its goals and ambitions, It observes Itself. It observes our mind, body, heart and Itself. And when the ego principle becomes imperceptible, the observing Subject disappears, and our Consciousness is immersed in the universal Consciousness as the universal Consciousness. That’s because the Subject polarization of Consciousness is supplied by our ego principle.
For some time, during meditation, we feel like we have completely lost our I-ness. But not really. We have lost only the ‘I’ supplied by our ego principle. The real ‘I’ exists somewhere else.
A lot of literature is available on the subject of annihilation of ego principle by the practitioners of non-dualistic school of thought. Both traditional and contemporary practitioners have discussed this topic in detail. Many of the contemporary practitioners propose to the yet-to-be-enlightened to directly annihilate it - Nisargadatta is a notable exception.
It won’t work. Until you internally discriminate and separate your Consciousness, you can’t even think of annihilation of ego. Your Consciousness is buried deep into your mind, body and heart. You have to unearth It out first. Then if you immerse your Consciousness in the universal Consciousness, your ego principle will automatically disappear without any effort on your part. That’s why Surrender works wonders while Self Enquiry fails so often miserably, especially for persons immersed in family and professional activities like me.
Again, the yet-to-be-enlightened are often misled to believe that ego principle can be permanently annihilated. It is not a file on the computer that can be deleted from the hard disk. It is not so much a villain, as it is currently portrayed, that it deserves permanent destruction. When you meditate on your Consciousness, your ego disappears; when you do not, it reappears - of course, in a much weakened form. But without ego principle there cannot be full experience of life for anyone, whether enlightened or not.
To sum up, ego annihilation doesn’t deserve so much fuss it is attracting right now - most of them are useless theoretical crap.
Okay, back to my story. After expansion of Consciousness is realized, I started Expanded Consciousness Meditation to move from my Consciousness to my Self. I have discussed Expanded Consciousness Meditation in adequate detail in my book titled “Secrets of Manifestation”.
One day while I was meditating on my expanded Consciousness with my eyes closed, my Self revealed Itself with all Its splendor.
Suddenly there occurred a very deep silence. My mind was stunned and stopped its thinking process. More exactly, it was emptied. My senses became sharp and I could clearly hear the distant noises. I could perfectly perceive the background silence that extended into the infinite space replacing my expanded Consciousness.
When we say ‘I talk’ or ‘I think’ or ‘I desire’, we refer to this Field of silence by the word ‘I’. Our I-sense arises from this Field. That’s why this Field is known as the Self. Our Consciousness arises from and disappears into our Self; our Self is the source and sink of our Consciousness. Whatever we experience through our body, mind and heart are experienced only by means of our Consciousness. Our Self cannot experience anything except through our Consciousness.
What is the answer to the question I encountered after my first spiritual experience? Who am I? The guy who hears and thinks, or the guy who observes my hearing and thinking?
I’m neither my Consciousness that hears and thinks nor my Consciousness that observes my hearing and thinking. I’m all-pervading Self from Whom this bipolarized Consciousness arises.
Just as we’ll be able to see the Sun only if we use a smoke glass to filter its rays, we can perceive our Self only if we meditate on our expanded Consciousness to filter It. For, our Self is buried deep in our Consciousness, and as long as our ego principle is limiting our Consciousness to the boundary of our body and our mind principle is clouding our Consciousness, we can never perceive our Self.
But once the ego principle becomes imperceptible and the mind principle is emptied, our Consciousness gets expanded and becomes transparent to reveal our Self hidden beneath.
Before moving onto the final topic of realization of Lord, let me say a word or two on the evergreen battle between non-dualism and dualism schools of thought regarding what is called one’s soul.
Suppose I name a jack fruit as the fruit, and you name a mango fruit as the fruit. Assume that neither of us has really seen a jack fruit or mango fruit - we have only read descriptions the persons who have actually seen them have written. Now I argue with you that there are many small fruits within the big fruit, and you argue with me that there is only one fruit and there are no big and small fruits. This argument will never end as the two sides have not started from the common foundation. Waste of time. Go and get the mango or jack fruit and eat it.
Dualistic school names the Self hidden in the ego-limited individuated Consciousness as one’s soul whereas the non-dualistic school terms the Self revealed in the ego annihilated expanded Consciousness as one’s soul. Just because they both named the respective Self as soul (atman) they think they can argue over this matter. Interestingly, they both will reach the very same final target, namely the Lord of the universe, in their heart - only if they spend their time in the practice.
5. ஆத்ம ஞானம்
“என் மூலமாக அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வாரான். என்னை நீங்கள் உண்மையிலேயே அறிந்திருப்பீர்களேயானால், என் பிதாவையும் நீங்கள் அறிவீர்கள்.”
~ ஏசுநாதர் (யோவான் 14 : 6&7).
படிப்பு பயனற்றது என்று உணர்ந்த அந்த இளைஞன், வீட்டை விட்டுப் பயணித்து, ஒரு புனித நகருக்குச் சென்றார். அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்து, ஆத்ம ஞானமடைந்து, பின் ஆன்மீக ஞானியாக உலகப் புகழ் பெற்றார். அவர் நிர்மாணித்த ஆசிரமத்துக்கு உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வருடந்தோறும் இப்போது வந்த வண்ணம் உள்ளனர். அத்வைதம் போதித்த அவர், ஆத்ம ஞானம் அடைய ஆத்ம விசாரணையைப் பரிந்துரை செய்தார்.
அந்த ஞானியைப் பார்க்க வந்த ஒருவர், “நமக்குள் எழும் ‘நான்’ என்ற உணர்வு ஆத்மாதான், இல்லையா?” என்று அவரிடம் கேட்டார்.
அதற்கு ஞானி, “இல்லை; தன்முனைப்புத் தத்துவம்தான் ‘நான்’ என்ற உணர்வாக நமக்குள் எழுகிறது. அந்தத் தன்முனைப்புத் தத்துவம் எங்கிருந்து எழுகிறதோ, அதுதான் ஆத்மா” என்றார்.
அது ரமண மஹரிஷி. நம்முடைய நான் தன்மை, அதாவது, ‘நான்’ என்ற உணர்வு, நம் ஆத்மாவையே குறித்தாலும், அவர் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துகிறார். ஏனெனில், இன்னும் ஞானமடையாத சாதகர்கள், தன்முனைப்புத் தத்துவத்தால் அளவுக்கு உட்படுத்தப்பட்ட உயிருணர்வை, ஆத்மா என்று தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.
நான் பிறந்த ஊர், ரமண மஹரிஷி பிறந்த ஊருக்கு மிக அருகில் இருக்கிறது. எனவே, சிறு வயதில் இருந்தே அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் ஆன்மீக சாதனைகளையும் கேட்டிருக்கிறேன். இரண்டு மூன்று தடவைகள் நான் திருவண்ணாமலையில் உள்ள ரமணாசிரமம் சென்றிருக்கிறேன்.
நம் உயிருணர்வு நம் மனம், உடல், நெஞ்சத்திலிருந்து உள்முகமாகப் பிரிக்கப்பட்ட பின்பு, விரைவிலேயே, நம் தன்முனைப்புத் தத்துவம் கரைந்துவிடும். இந்தத் தன்முனைப்புத் தத்துவம்தான், நம் உயிருணர்வை நம் உடல் எல்லைக்குள் அளவுபடுத்துகிறது. இப்படி அளவுபடுத்தும் தன்முனைப்புத் தத்துவம் கரைந்தவுடன், நம் உயிருணர்வு, நம் உடல் எல்லையைத் தாண்டி, வெளியில் அளவற்றுப் பரந்து விரிகிறது.
நம் உயிருணர்வு நம் உடல் எல்லையைத் தாண்டி நிற்கிறது என்பதற்கு, நம் உடலுக்கு வெளியே இருப்பதை எல்லாம் நம்மால் உணர முடியும் என்பதாகப் பொருள் இல்லை. அதாவது, உடலைத் தாண்டி நமக்கு உணர்வு ஏதும் இருக்காது; நம்முடைய உயிருணர்வின் இருப்பை நம் உடலைத் தாண்டி நம்மால் உணர இயலும்; அவ்வளவுதான். இது உடலை விட்டு வெளிச்செல்லும் அனுபவம் அல்ல.
இந்த ஆன்மீக அனுபவத்தை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். தன்முனைப்புத் தத்துவம் கரையும் முன்பாக, நம் உயிருணர்வு, கவனிப்பது-கவனிக்கப்படுவது என இரண்டாகப் பிரிந்து நிற்கிறது. அது தன்னைத் தானே கவனிக்கிறது. எப்படி நம் மனம் எண்ணங்களைச் சிந்திப்பதையும், நம் உடல் புலன்நுகர் உணர்வுகளை உணர்வதையும், நம் நெஞ்சம் இலக்குகள், எதிர்காலத் திட்டங்களை விரும்புவதையும், அது கவனிக்கிறதோ, அப்படியே, அது தன்னையும் கவனிக்கிறது. அது நம் மனத்தையும் உடலையும் நெஞ்சத்தையும் தன்னையும் கவனிக்கிறது. தன்முனைப்புத் தத்துவம் கரைந்ததும், கவனிக்கும் உயிருணர்வு மறைந்து, நம் உயிருணர்வு, நம் உள்ளிருக்கும் இறைஉயிருணர்வில் மூழ்கி, இறைஉயிருணர்வாகவே ஒன்றி நிற்கிறது. ஏனெனில், தன்முனைப்புத் தத்துவம்தான், கவனிக்கும் உயிருணர்வின் நான்தன்மையைத் தருகிறது.
இந்நிலையில், கண்மூடி தியானிக்கும் போது, நம்முடைய நான்தன்மையை நாம் முழுமையாக இழந்துவிட்டது போலத் தோன்றும். அது உண்மையல்ல. தன்முனைப்புத் தத்துவம் தரும் நான்தன்மையைத்தான் இழந்திருக்கிறோம். உண்மையான ‘நான்’ வேறு எங்கோ ஆழத்தில் இருக்கிறது.
தன்முனைப்புத் தத்துவத்தை அழிப்பது தொடர்பாக, அத்வைத சித்தாந்த வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் பலரும் நிறைய எழுதியிருக்கிறார்கள். பாரம்பரிய அத்வைத சித்தாந்திகளும் தற்கால அத்வைத சித்தாந்திகளும் இது தொடர்பாக நிறைய விவாதித்திருக்கிறார்கள். நவீன கால அத்வைத சித்தாந்திகள் பலரும் தன்முனைப்புத் தத்துவத்தை நேரடியாக அழித்துவிட சாதகர்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள் – நிசர்கதத்தா குறிப்பிடத்தக்க விதிவிலக்கு.
அது பயன்படாது. உங்கள் உயிருணர்வை வேறுபடுத்தி உள்முகமாகப் பிரிக்கும் வரையில், தன்முனைப்புத் தத்துவத்தை அழிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. உங்கள் உயிருணர்வு, உங்கள் மனம், உடல், நெஞ்சத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது. அதை முதலில் தோண்டி வெளியே எடுக்க வேண்டும். அதன் பிறகு, அந்த உயிருணர்வை, எங்கும் விரவி நிற்கும் இறைஉயிருணர்விடம் ஒருங்கிணைத்தால், உங்கள் தன்முனைப்புத் தத்துவம், உங்கள் முயற்சி ஏதும் தேவையின்றி, தானாகவே கரைந்துவிடும். இதனால்தான், ஆத்ம விசாரம் பெரும்பாலும் படு மோசமாகத் தோற்றுப்போகிறது; சரணாகதி வியப்பளிக்கும் வகையில் செயல்படுகிறது - குறிப்பாக, என்னைப் போன்ற குடும்ப, தொழில் செயல்பாடுகளில் மூழ்கி இருப்பவர்களுக்கு.
மேலும், தன்முனைப்புத் தத்துவம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டியது என்றே சாதகர்கள் தவறுதலாக நம்பும்படியாக போதிக்கப்படுகிறார்கள். அது ஒன்றும் உங்கள் கம்ப்யூட்டரின் வன்வட்டில் உள்ள மின்கோப்பு அல்ல – அழித்துவிடுவதற்கு. தவிரவும், தற்போது இணைய விவாதங்களில் தோற்றப்படுத்தப்படுவது போல, அதை நிரந்தரமாக அழிக்க வேண்டிய அளவுக்கு, அது ஒன்றும் அவ்வளவு பெரிய வில்லனும் இல்லை. தியானத்தில் உங்கள் உயிருணர்வில் உங்கள் கவனத்தைக் குவிக்கும் போது, உங்கள் தன்முனைப்புத் தத்துவம் மறைகிறது; மற்ற நேரங்களில் மீண்டும் உயிர்த்தெழுகிறது – மிகவும் வலுவற்ற நிலையில். ஆனால், ஆத்ம ஞானம் அடைந்திருந்தாலும் இன்னும் அடைந்திருக்கா விட்டாலும், தன்முனைப்புத் தத்துவத்தைத் தவிர்த்துவிட்டு, யாரும் வாழ்வின் முழு அனுபவம் பெற வாய்ப்பில்லை.
முடிவாக, தற்போது இணைய விவாதங்களில் பேசப்படும் அளவுக்கு, தன்முனைப்புத் தத்துவத்தை அழிப்பது என்பது, ஆத்ம யாத்திரையில் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. அந்த விவாதங்களில் பெரும்பாலானவை பயனற்ற வெறும் சொற்குப்பைகளே.
மீண்டும் என் அனுபவத்துக்கு வருவோம். உயிருணர்வின் நீட்சிப் பரவல் அனுபவத்துக்குப் பிறகு, உயிருணர்விலிருந்து ஆத்மாவுக்குப் பயணிக்கும் பொருட்டு, நீள்உயிருணர்வு தியானப் பயிற்சியைத் தொடங்கினேன்.
ஒரு நாள், அவ்வாறாக கண்களை மூடி தியானத்தில் இருந்த போது, என் ஆத்மா அற்புதமாக வெளிப்பட்டு காட்சியளித்தது.
திடீரென்று ஓர் ஆழமான அமைதி. என் மனம் திகைத்து, தன் இயல்பான சிந்திக்கும் செயலை நிறுத்த வேண்டியதாயிற்று. சரியாகச் சொல்ல வேண்டுமானால், அது சுத்தமாக காலியாகி விட்டது. என் செவிப்புலன் மிகவும் கூர்மையடைந்து, தூரத்து ஒலிகளும் தெளிவாகக் கேட்டது. என் விரிவடைந்த உயிருணர்வை உறிஞ்சிக்கொண்டு, வெளி எங்கும் பரந்து விரிந்து நிற்கும் அந்த பேரமைதியை என்னால் பின்புலத்தில் உணர முடிந்தது.
‘நான் பேசுகிறேன்’, ‘நான் நினைக்கிறேன்’, ‘நான் விரும்புகிறேன்’ என்று நாம் சொல்லும்போது, ‘நான்’ என்ற வார்த்தை இந்தப் பேரமைதிப் புலத்தையே குறிப்பிடுகிறது. அதனால்தான் இந்தப் புலம், ஆத்மா என்று அழைக்கப்படுகிறது. நம் உயிருணர்வு இந்தப் புலத்திலிருந்தே தோன்றுகிறது, இந்தப் புலத்தின் உள்ளேயே மறைகிறது; நம் ஆத்மாவே நம் உயிருணர்வின் தோன்றும் இடமும் ஒடுங்கும் இடமும். நம் உடல் மனம் நெஞ்சம் மூலமாக வரும் அனுபவம் அனைத்தும் நம் உயிருணர்வின் மூலமாகவே செயல்படுத்தப்படுகின்றன. நம்முடைய ஆத்மா, நம் உயிருணர்வின் மூலமாகவே அனுபவம் பெற வேண்டும்.
வெளியே கண்ணுக்குத் தெரியும்படி எனக்கு ஏற்பட்ட முதல் ஆன்மீக அனுபவத்தின் போது எனக்குத் தோன்றிய கேள்விக்கு பதில் என்ன? நான் என்பது யார்? கேட்பவனும் சிந்திப்பவனுமான அவனா, கேட்பதையும் சிந்திப்பதையும் கவனிக்கும் இவனா?
நான் என்பது, ஒலிகளைக் கேட்பவனும் எண்ணங்களை சிந்திப்பவனுமான உயிருணர்வும் இல்லை; சிந்திப்பதையும் கேட்பதையும் கவனிக்கும் உயிருணர்வும் இல்லை. இப்படி இரண்டாகப் பிரிந்து இயங்கும் உயிருணர்வின் தோற்றுவாயான, எங்கும் பரந்து விரிந்து நிற்கும் ஆத்மா.
எப்படி புகைக் கண்ணாடி மூலமாக சூரியனைப் பார்க்கும் போது, அதனுடைய கிரணங்கள் வடிகட்டப்பட்டு, நம்மால் சூரியனைப் பார்க்க முடிகிறதோ, அப்படியே, விரிவடைந்த நம் உயிருணர்வின் மீது தியானிக்கும் போது, அது வடிகட்டப்பட்டு, உள்ளிருக்கும் ஆத்மா நமக்கு தரிசனமாகிறது. ஏனெனில், நம்முடைய ஆத்மா, நம் உயிருணர்வுக்குள் ஆழமாகப் புதைந்து கிடக்கிறது. தன்முனைப்புத் தத்துவம் நம் உயிருணர்வை நம் உடல் எல்லைக்குள் அளவுபடுத்தும் வரையில், மன தத்துவம் நம் உயிருணர்வில் இருந்துகொண்டு மறைத்துக் கொண்டிருக்கும் வரையில், நம்மால் நம் ஆத்மாவை தரிசிக்க இயலாது.
ஆனால், தன்முனைப்புத் தத்துவம் மறைந்து, நம் உயிருணர்வு விரிவடைந்து, மன தத்துவம் காலியாகி, விரிவடைந்த நம் உயிருணர்வு தெளிந்து விட்டால், உள்ளிருக்கும் நம் ஆத்மா நமக்கு தரிசனமாகிவிடும்.
இறை தரிசனம் பெறும் இறுதிக் கட்டத்துக்குச் செல்லும் முன்பாக, ஆத்மா என்பது எதனைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய அத்வைத துவைத சித்தாந்திகளுக்கு இடையே காலங்காலமாக நடக்கும் வார்த்தைப் போரைப் பற்றிய ஒரு விளக்கத்தைப் பார்த்துவிடலாம்.
நான் பலாப்பழத்தைப் பழம் என்று சொல்வதாகவும், நீங்கள் மாம்பழத்தைப் பழம் என்று சொல்வதாகவும் வைத்துக்கொள்வோம். நாம் இருவருமே பலாப்பழத்தையோ மாம்பழத்தையோ இதுவரையில் பார்க்கவே இல்லை என்றும், அவற்றைப் பார்த்தவர்கள் எழுதிய கட்டுரைகளை வாசித்த அனுபவம் மட்டுமே இருவருக்கும் இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். ஒரு பெரிய பழத்துக்குள் பல சிறு பழங்கள் இருப்பதாக நானும், இருப்பது ஒரே ஒரு பழம்தான் என்று நீங்களும் விவாதம் செய்துகொண்டிருக்கிறோம். இருவரும் ஒரே அடித்தளத்திலிருந்து விவாதம் செய்யவில்லை என்பதால், இந்த விவாதம் முடிவற்றதாக ஆகிவிடும். தேவையற்ற கால விரயம். மாம்பழமோ பலாப்பழமோ, பறித்து உண்ண முயல்வதை விட்டு விட்டு, வெட்டித்தனமாக விவாதம் செய்வதால் யாருக்கு லாபம்?
தன்முனைப்புத் தத்துவத்தால் அளவுபடுத்தப்பட்ட நம் உயிருணர்வின் உள்ளே இருக்கும், நான்தன்மையின் தோற்றுவாயை ஆத்மா என துவைத சித்தாந்தம் சொல்கிறது. தன்முனைப்புத் தத்துவம் மறைந்து விரிவு பட்டு நிற்கும் உயிருணர்வில் தரிசனம் அளிக்கும் நான்தன்மையை ஆத்மா என்று அத்வைத சித்தாந்தம் சொல்கிறது. இருவரும் ஆத்மா என ஒரே பதத்தைப் பயன்படுத்துவதனாலேயே ஒரே தத்துவத்தைக் குறிப்பதாக நினைத்துக்கொண்டு நாம் முடிவற்ற விவாதங்களில் மூழ்கிவிடுகிறோம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அத்வைத துவைத சித்தாந்திகள் இருவருமே இரண்டு நிலைகளில் காட்சி தரும் நான்தன்மையை அனுபவத்தில் கண்டு, இறுதியில் இவ்வுலகை ஆளும் இறைவனையும் தங்கள் நெஞ்சில் காணத்தான் போகிறார்கள் – விவாதத்தை நிறுத்தி விட்டு, சாதனையில் கவனம் செலுத்தினால்.
No comments:
Post a Comment