“Blessed is he who knows the greatness of his Guru and thinks Him to be Hari-Hara-Brahma incarnate.”
~ Shirdi Sai Baba.
One day I took up the official biography
book of Shirdi Sai Baba and casually opened the book aimlessly. In the landing
page the author was discussing the instructions a preceptor belonging to non-dualistic
school of thought would impart to his disciple: “You are not what you think you
are but are opulent and rich...” I couldn’t read any further.
What does it mean? My heart clearly
understood the meaning which had already percolated deep into it, but my mind
was in denial - it couldn’t be.
Dualistic school of thought is built upon
the foundation that the universal Self of God is of infinite wisdom and power
whereas our Self is of infinitesimal wisdom and power. But non-dualistic school
argues that the perceived individuated and limited Self is only an illusion.
Reconciling these two apparently opposing
doctrines, we end up with something like this: our Self is really the universal
Self of God but for the purpose of experience, It has limited Itself in wisdom
and power.
Even after this reconciliation my mind
couldn’t accept the fact that my Self was really the universal Self of God
though It had limited Its wisdom and power, as it devastated the doctrine of
dualism required for my devotional practice. Assume that you have been imparted
this instruction onto your heart with such a force that you can’t deny it. Now
you go to your favorite temple. You worship God, ‘My dear God, I have all
wisdom and power you have - I’ve just forgotten them for some purpose. So,
until I regain them, I worship you.’ Will your devotion be the same as that before
getting this instruction?
My mind rebelled for a long time - a couple
of years. And then it gradually learned to strike the balance between Wisdom
and Devotion. Now I was ready to practice Divine Love Yoga, a spiritual
practice wherein one expands and merges one’s identity with all sentient living
beings one sees.
Love for Lord arising from traditional
devotional practices is conditional, as this love will disappear once we
encounter some problem in our life and we doubt that Lord didn’t bail us out.
Love for Self arising from traditional wisdom practices is, no doubt, unconditional,
but it fails to include other sentient living beings. But Divine Love is this
unconditional Love extended to include all sentient living beings one sees.
Divine Love Yoga is built upon the
foundation of a judicious mix of Devotion and Wisdom. While traditional
devotional practices are easy to practice but ineffective, traditional wisdom
practices are effective but difficult to practice. Divine Love Yoga combines
the simplicity of traditional devotional practices with effectiveness of
traditional wisdom practices. As it takes advantage of both worlds, it is
undoubtedly the king of spiritual practices.
I was actively practicing Divine Love Yoga
for a couple of years, and then the first spiritual experience happened to me
with all its splendor.
2. ஞான தத்துவம்
“எவன் ஒருவன் தன் குருநாதரை ஹரிஹரபிரஹ்மா ரூபமாக எண்ணி அவருடைய மகத்துவத்தை அறிகிறானோ, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவன்.”
~ சீரடி ஸாயி பாபா.
ஒரு நாள் சீரடி ஸாயி பாபாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எடுத்து, தற்செயலாக ஒரு பக்கத்தைத் திருப்பி, அதைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் நூலாசிரியர், அத்வைத ஆச்சார்யன் தன் சீடர்களுக்கு வழக்கமாக உபதேசிக்கும் முக்கிய அத்வைதக் கருத்தை விளக்கியிருந்தார்: “நீங்கள் யார் என்று உங்களை நினைக்கிறீர்களோ, நீங்கள் அதுவல்ல; நீங்கள் உண்மையில் வளமையும் செழிப்பும் மிகுந்தவர்...” அதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை.
இதற்கு என்ன அர்த்தம்? ஏற்கனவே தனது ஆழத்துக்குச் சென்றுவிட்ட அதன் பொருளை, என் நெஞ்சம் மிக நன்றாகப் புரிந்துகொண்டது. ஆனால், அதனை என் மனத்தால் சிறிதும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை – அது எப்படி சாத்தியம்?
பரமாத்மா, முற்றறிவும் முழுசக்தியும் படைத்தது; ஆனால், ஜீவாத்மா, அளவுபட்ட அறிவும் அளவுபட்ட சக்தியும் கொண்டது என்ற தத்துவத்தின் மீது எழுப்பப்பட்டதுதான் துவைதம். அத்வைதம், அளவுபட்ட அறிவும் சக்தியும் கொண்டதாக அறியப்படும் தனித்தனியான ஜீவாத்மாக்கள், மாயையால் உண்டான தோற்றம் மாத்திரமே என்று வாதிடுகிறது.
இவ்விரண்டின் முரண்பாடுகளை நீக்கி ஒத்திசைத்துப் பார்த்தோமேயானால், பின்வரும் கருத்து தோன்றும்: நம்முடைய ஆத்மா உண்மையில் பரமாத்மா என்ற போதிலும், தன் அனுபவத்தின் பொருட்டு, தன் முற்றறிவையும் முழுசக்தியையும் மறந்துகொண்டு, தனித்த ஜீவாத்மாவாகத் தோற்றமளிக்கிறது.
மேற்சொன்ன ஒத்திசைவுக்குப் பின்னும் என் மனம், என் ஆத்மாவை, தன்னை மறந்துகொண்ட பரமாத்மாவாகக் கருத மறுத்தது. ஏனெனில், அது, என் பக்தி மார்க்கத்துக்குத் தேவையான துவைதக் கோட்பாட்டை அழித்துவிடும்.
உங்களால் மறுக்க இயலாத அளவுக்கு மேற்சொன்ன உபதேசம், உங்கள் நெஞ்சில் ஆழமாகவும் வலுவாகவும் பதிக்கப்படுகிறது என்று கொள்வோம். கோயிலுக்குச் சென்று உங்கள் இஷ்ட தெய்வத்திடம் இப்படி உரையாடுகிறீர்கள்: “இறைவா, உன்னிடம் உள்ள முற்றறிவும் முழுசக்தியும் என்னிடமும் இருக்கின்றன – ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவற்றை மறந்துவிட்டேன். ஆகவே, அவற்றை மீண்டும் பெறும் வரையில், உன்னை வணங்கலாம் என்று நினைக்கிறேன்.” ஞான தத்துவ உபதேசம் பெறும் முன்னதாக உங்களுக்கு இருந்த அந்த பக்தியுணர்வு தற்போதும் தொடருமா?
என் மனம் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் போராடியது. அதன் பிறகு, படிப்படியாக பக்தியையும் ஞானத்தையும் ஒருங்கிணைத்துப் பயிலக் கற்றுக்கொண்டது. தொடர்ந்து, தெய்வீக அன்பு யோகத்தைப் பயிற்சி செய்யத் தயாரானேன். தெய்வீக அன்பு யோகம் என்பது, தான் காணும் அனைத்து உயிரினங்களுடனும் தன்னை அடையாளப்படுத்திப் பயிற்சி செய்யும் ஆன்மீகச் செயல்முறை.
வழக்கமான பக்தி மார்க்க செயல்முறைகள் மூலமாக இறைவனிடம் நமக்கு உண்டாகும் அன்பு என்பது, நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஒன்றாகும். ஏனெனில், நாம் விரும்பாத ஒரு நிகழ்வு நம் வாழ்வில் நடந்து, தெய்வம் நம்மைக் காக்கவில்லை என்று நாம் நினைக்கும்போது, இந்த அன்பு காணாமல் போய்விடும். வழக்கமான ஞான மார்க்க செயல்முறைகள் மூலமாக நம் ஆத்மாவிடம் நமக்கு உண்டாகும் அன்பு நிபந்தனையற்றதுதான். இருப்பினும், இந்த அன்பு, பிற உயிரினங்களை நேரடியாக உள்ளடக்கியது அல்ல. ஆனால், தெய்வீக அன்பு என்பது, தான் பார்க்கும் பிற உயிரினங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட நிபந்தனையற்ற ஆத்ம அன்பாகும்.
தெய்வீக அன்பு யோகம், பக்தியும் ஞானமும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட அடித்தளத்திலிருந்து கட்டப்பட்ட ஆன்மீக செயல்முறையாகும். பக்தி மார்க்கம் பயில எளிமையானது, ஆனால் திறனற்றது. ஞான மார்க்கம் திறனுள்ளது, ஆனால் பயிலக் கடினமானது. தெய்வீக அன்பு யோகம், பக்தி மார்க்கத்தின் எளிமையையும் ஞான மார்க்கத்தின் திறனையும் ஒருங்கே கொண்டது. இரண்டு மார்க்கங்களின் நன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், இதனை ஆன்மீக செயல்முறைகளின் அரசன் என்று அழைக்கலாம்.
இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக தெய்வீக அன்பு யோகத்தைப் பயிற்சி செய்து வந்தேன். அதன் பிறகு, எனக்கு முதல் அற்புத ஆன்மீக அனுபவம் வாய்க்கப் பெற்றேன்.
No comments:
Post a Comment