“There are many ways leading there; there is also one way from here. The way is difficult. There are tigers and wolves in the jungles on the way…The Guide will take you straight to your destination, avoiding wolves, tigers and ditches on the way. If there be no guide, there is the danger of being lost in the jungles or falling into the ditches.”
~ Shirdi Sai Baba.
I am really surprised at the volume of
discussion going on in various online forums on spiritual Enlightenment and Self-realization.
While it is a healthy trend overall, I’m skeptical about the usefulness of such
endless discussion on these topics among the yet-to-be-enlightened. If you and
I have never seen an elephant, our endless discussion on the article written by
a person who has actually seen an elephant will be of very little use to either
of us.
As Sri Ramakrishna said, why should we
waste our time in counting the leaves of a mango tree instead of finding some
way to pluck the mangoes and eat them?
So, I’m not writing this blog to trigger
yet another around of discussion, but in the hope that it will inspire a few to
launch their own project to discover their Self and Lord therein.
This blog covers my own successful personal
journey in search of my Self and Lord therein inspired and guided by the grace
of Guru.
Traditionally, either Devotional practice
like Chanting or Wisdom practice like Self-Enquiry is recommended for
Enlightenment. In my humble view, it is practically impossible for persons
immersed in family and professional activities like me to get enlightened with
either practice as Devotional practice never tries to go beyond one’s
Consciousness to Self and Wisdom practice tries to reach Self bypassing one’s
Consciousness. In other words, the former is easy but ineffective, and the
latter is effective but difficult to practice.
So, I employed the spiritual tool SURRENDER
for my Enlightenment. Surrender combines the benefit of both worlds as it is a
judicious mix of Devotion and Wisdom, and so it is a foolproof tool for
Enlightenment for ordinary persons like me. I employed Divine Love Yoga to implement Surrender.
Welcome to the journal of my spiritual
journey in search of Lord in my heart. Readers may send their comments, if any, to my email id (umasreedasan@gmail.com) or record them below in this blog.
முன்னுரை
“அங்கு செல்ல நிறைய பாதைகள் உள்ளன; இங்கிருந்தும் ஒரு பாதை செல்கிறது - ஆனால் மிகவும் கடினமானது. வழியிலுள்ள காடுகளில் ஓநாய்களும் புலிகளும் திரியும்… வழியில் திரியும் ஓநாய்களையும் புலிகளையும் தவிர்த்து, நீங்கள் செல்ல வேண்டிய இலக்குக்கு வழிகாட்டி நேரே உங்களை அழைத்துச் சென்றுவிடுவார். ஆனால், வழிகாட்டி இல்லாமல் சென்றால், காடுகளில் நீங்கள் தொலைந்து போய்விடும் அபாயம் இருக்கிறது.”
~ சீரடி ஸாயி பாபா.
ஆத்ம ஞானம் அடைவது தொடர்பாக பல்வேறு இணையக் கருத்துக் களங்களில் ஏராளமானோர் ஆர்வத்துடன் விவாதித்து வருவது வியப்பாக உள்ளது. இது ஆரோக்கியமான ஒன்றுதான் என்றாலும், இன்னும் ஞானமடைந்திராத பலரும் தங்களுக்குள் நடத்தி வரும் இத்தகைய முடிவில்லா விவாதங்களினால் பயன் இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. நீங்களும் நானும் யானையை இதுவரை பார்க்கவே இல்லை என்று கொள்வோம்; யானையை உண்மையிலேயே பார்த்த ஒருவர் எழுதிய கட்டுரையைப் பற்றி நாம் இருவரும் விவாதித்துக் கொண்டே இருப்பதால் நம் இருவருக்கும் பயன் ஏதுமிருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்னது போல, மாமரத்தின் இலைகளை எண்ணிக்கொண்டு நம் நேரத்தை விரயமாக்குவதை விடவும், மாம்பழங்களைப் பறித்துச் சாப்பிடும் வழியைத் தேடுவதே சிறந்தது, இல்லையா?
எனவே, இந்த வலைத்தளப்பதிவின் மூலம் இன்னொரு விவாதத்தைத் தொடக்குவது என் நோக்கம் இல்லை. இதன் மூலமாக ஒரு சிலரேனும் ஊக்கமடைந்து, தங்கள் ஆத்மாவையும் அதனுள் விளங்கும் ஈசுவரனையும் காண்பதற்கான தங்களுடைய சொந்த ஆன்மீக யாத்திரையைத் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வலைப்பதிவை உங்கள் பார்வைக்கு பிரசுரிக்கிறேன்.
குருநாதரின் பரம கருணையால் தூண்டப்பட்டு வழிநடத்தப்பட்டு, என் ஆத்மாவையும் அதன் உள்ளே வீற்றிருக்கும் இவ்வுலகை ஆளும் இறைவனையும் காணும் பொருட்டு நான் மேற்கொண்ட ஆன்மீக வெற்றிப் பயணத்தை இந்த வலைப்பதிவுத் தளம் பதிவு செய்கிறது.
பாரம்பரியமாக, ஆன்மீக ஞானம் அடைவதற்கான வழிமுறையாக, இறைநாம உச்சாரணம் முதலான பக்தி மார்க்கமோ, ஆத்ம விசாரம் முதலான ஞான மார்க்கமோதான் பரிந்துரைக்கப்படும். என்னைப் போல குடும்பம் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் மூழ்கி வாழும் சாதாராண மனிதர்களுக்கு இவ்விரண்டு மார்க்கங்களுமே பயன்படுவதில்லை என்பது என் கருத்து. ஏனெனில், பக்தி மார்க்கம் சாதகனுடைய உயிருணர்வைத் தாண்டி ஆத்மாவை அடைய உதவுவதில்லை; ஞான மார்க்கமோ உயிருணர்வைத் தவிர்த்துவிட்டு ஆத்மாவை அடைய முயல்கிறது. முன்னது, பயில எளிமையானது, ஆனால் பயனில்லை. பின்னது, திறனுள்ளது, ஆனால் பயிலக் கடினமானது.
இதன் காரணமாக, நான் என்னுடைய ஆத்ம ஞானப் பயணத்திற்கு சரணாகதி மார்க்கத்தைப் பயன்படுத்தினேன். பக்தி மார்க்கத்தின் எளிமையும் ஞான மார்க்கத்தின் திறனும் மிகச் சரியாகச் சேர்க்கப்பட்ட கலவை என்பதால், என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு சரணாகதி மார்க்கமே சிறந்தது என்பது என் கருத்து. சரணாகதியைச் செயல்படுத்தும் வழிமுறையாக, தெய்வீக அன்பு யோகத்தைப் பயன்படுத்தினேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் ஈசுவரனைத் தேடிய என் ஆன்மீகப் பயணத்தின் பதிவுத் தொகுப்புக்கு உங்களை வரவேற்கிறேன். இது தொடர்பான உங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின், இந்த வலைப்பதிவுத் தளத்திலும் பதிவிடலாம்; என்னுடைய மின்னஞ்சலுக்கும் (umasreedasan@gmail.com) அனுப்பலாம்.